search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவையில் மழை"

    புதுவையில் மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கஜா புயலையொட்டி புதுவையில் கடந்த 15-ந்தேதி முதல் மழை கொட்டியது. புயல் கரையை கடந்த 15-ந்தேதி இரவு முதல் 16-ந்தேதி காலை வரை 6.5 செ.மீ. மழை பதிவானது.

    இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் தென் கிழக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என்பதால் புதுவை, காரைக்காலில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

    இதன்படி புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலை முதல் வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது. இன்று மாலை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவையில் இன்று பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவையில் வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெரியளவில் மழை பெய்யவில்லை. அதற்கு பதிலாக கோடை காலம் போல தகிக்கும் வெப்பம் நிலவியது. இதனால் அக்டோபர் மாதத்தில் பெரிதாக மழை பெய்யும் என மக்கள் நம்பி இருந்தனர்.

    இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் 2 நாட்கள் கடுமையான மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு அரசு விடுமுறையும் அறிவித்தது.

    இந்த மழை தொடரும் என அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தது. ஒத்திகையும் நடத்தி னர். ஆனால், மழை பெய்ய வில்லை. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. மழை பெய்வதற்கான சூழலும் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதுவையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    இன்று காலை 10 மணிக்கு மேல் புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    தீபாவளி பண்டிகைக்கு 2 வாரம் மட்டுமே உள்ள நிலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியுள்ளது வியாபாரிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மழையினால் மக்கள் வெளிவர மாட்டார்கள். வார இறுதிநாட்களில்தான் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் வருவார்கள். ஆனால், இன்று மழையின் காரணமாக மக்கள் நடமாட்டம் புதுவையில் குறைந்தது.

    இதேநிலை நீடித்தால் தீபாவளி வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கும் என வியாபாரிகள் கலக்க மடைந்துள்ளனர்.

    புதுவையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்தது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் வானில் மேகங்கள் திரண்டு வந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. 6 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் விட்டு தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது. இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

    சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தபடி சென்றன. இன்று காலையும் விட்டு விட்டு மழை பெய்தது.

    ×